Wednesday, September 2, 2009

எனது பத்திரிக்கையுலக அனுபவங்கள் -1

அடியேனின் பத்து வருட பத்திரிக்கையுலக அனுபவத்தையும், நான் சந்தித்த சில notable personalities பற்றியும் பல வருடங்களாக எனது நண்பர்கள் எழுத வற்புறுத்தி வந்தார்கள். எனக்கும் அது நீண்ட நாள் ஆசைதான் என்றாலும் அலுவல் மற்றும் சோம்பேறித்தனம் காரணமாகவும் தொடங்காமலே இருந்தேன். ட்வீட்டரில் அறிமுகமானதும் என் மதிப்பிற்குறிய நண்பர்கள் ஆயில்யன், சத்யராஜ்குமார், LA ராம் மற்றும் அன்புடன் பாலா மேலும் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்தியதன் விளைவு இந்த Blog. படியுங்கள், படித்துவிட்டு பின் உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டமிடுங்கள். நன்றி!

என் முதல் Posting என் All Time Favourite கவியரசர் கண்ணதாசனைப் பற்றியது.

முதலில் நான் பத்திரிக்கையில் freelancer ஆக எழுத ஆரம்பித்த இளம் பருவம் அது. ஆரம்பத்தில் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்படாத விஷயங்களைத்தான் தினமணி கதிர், ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன். முதலில் சினிமா துறை பத்திரிக்கைக்காரனாக என்னை இழுத்துப் போட்டது 'சினிமா எக்ஸ்ப்ரஸ் நவீனன்'தான்.

ஒரு நாள் சாவி பத்திரிக்கை அலுவலகம் சென்று சக பத்திரிக்கையாளர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது, உதவி ஆசிரியர் பாரிவள்ளல் என்னை கூப்பிட்டார். 'ஒரு முக்கியமானவர்கிட்ட ஒரு மினி பேட்டி ஒண்ணு எடுக்கனும்! செய்றீங்களா?" "யாரு கிட்ட?"அரைகுறை ஆர்வத்தோடுதான் கேட்டேன். "நம்ம கவிஞர் கண்ணதாசன் சார் கிட்டதான்" புன்சிரிப்போடு சொன்னார். நானோ ஒரு கண்ணதாச ரஸிகன்.. இல்லை!இல்லை! ஏறக்குறைய பக்தன். அவர் கவிதைகள், புத்தகங்கள், பாடல்கள் என்று ஒரே பைத்தியம்.

இதற்குமுன் மாணவர் தமிழ் மன்றத்தில் மாணவ கும்பலோடு அவரை பார்த்திருக்கிறேன். சிறப்பு பேருரை ஆற்ற வந்திருந்தார். அவரது தமிழ் உரை முடிந்து, தந்திக் கம்பத்து காக்கைகளில் ஒன்றாய் அவரோடு க்ரூப் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறேன். கிடைத்த சில மில்லி செகண்ட் தருணத்தில் ரொம்ப பக்தியோடு ரெண்டு வார்த்தை அவரோடு பேசும்போது கொலீரென மொத்த பசங்களும் மொய்த்துக்கொண்டு ஆளாளுக்கு ஏதேதோ கேட்டு என் கேள்வியை அவர்களது சப்தத்தில் மூழ்கடித்தனர். கவியரசரும் இவனுங்களோட பேசி மாயாதென்று புன்முறுவல் பூத்தபடியே கையாட்டி காரில் ஏறிப்போய்விட்டார். பிறகு பல சமயம் தொடர்ந்து அவரது வீனஸ் காலனி பேருரைகளை கேட்கப்போய் கூட்டத்தில் ஒருவராய் உட்கார்ந்து கேட்டு அவரை கிட்டத்தில் பார்க்க முடிந்ததே தவிர பேச முடியவில்லை. அது ஒரு நீண்ட நாள் ஏக்கம், அடங்காத தாகம் என்று கூட சொல்லலாம்.

அப்படிப்பட்டவனுக்கு, இந்த வாய்ப்பு பெரிய வரமாகத்தான் மடியில் வந்து விழுந்தது. விடுவேனா! 'பாரி சார்! சொல்லுங்க! என்ன பேட்டி இது?" கேட்டேன்.

பாரி வள்ளல் சின்ன சின்ன விஷயத்தையும் பூச்சூடி, பொட்டு வைத்து அழகுபடுத்தி ப்ரம்மாண்டமான ஒன்றாக காட்டுவதில் சமர்த்தர். பல்வேறு Build Upக்கு பின் விஷயத்துக்கு வந்தார். "ஒரு situation சொல்றேன். அதே மாதிரி அவருக்கு அனுபவம் இருக்கான்னு கேளுங்க! இருந்தா அதை கேட்டு சுவையாக எழுதிகிட்டு வாங்க?" என்று எனக்கு அந்த சிச்சுவேஷனையும் சொன்னார். எனக்கு என்னமோ அது ஒன்றும் ஸ்வாரஸ்யமாக பட வில்லை. கொஞ்சம் பேத்தலாகவும் தோன்றியது. இருந்தாலும் கவியரசரை கிட்ட சந்தித்து பேச சந்தர்ப்பமாச்சே என்று "OK" என்று சொன்னேன். "கவியரசர் கவிதா ஓட்டலில்தான் சாயந்திர வேளையில் இருப்பார்" என்று TIPS கொடுத்தார்.

மாலை நேரம் கோவிலுக்கு போகும் பக்தனைப் போல பஸ் பிடித்து ஆழ்வார்பேட்டை ஹோட்டல் கவிதா சென்றேன். பாரி வள்ளல் முதலிலேயே போன் பண்ணி சொல்லியிருந்தார் போல. உதவியாளர் ஒருத்தர் என்னை உள்ளே அழைத்துப் போனார். கவியரசருக்கு சொந்தமான அந்த ஹோட்டலில் கல்யாணமும் நடக்கும் லாட்ஜிங் வசதியும் உண்டு. திருமணம் நடக்கும் கீற்று கொட்டகையில் கோப்பையும் கையுமாக ஒரு மூங்கில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் சிறு டீபாய். அதன் மேல் ஏதோ ஒரு அந்நிய நாட்டு Full பாட்டில். அதனுள் தேன் வண்ண திரவம். பக்கத்தில் சற்று கறுத்த நிறத்தில் ஆனால் களையாய் ஒரு 30 -32 வயதிருக்கும் பெண். ரஸிகையா, கவிதாயினியா அல்லது மது ஊற்றிக் கொடுக்க வந்த உதவியாளரா? சரி நமக்கேன் என்று நினைத்து கவியரசரைப் பார்த்தேன்.

கவியரசர் இத்தனை அருகில்.. செக்யூரிடி கூட கிடையாது. எளிமையான மனிதர். வெள்ளை வேட்டி. வெள்ளை அரைக்கை சட்டை. நெற்றியில் விபூதிக் கீற்று. என்ன அமைதியான ஒளி வீசும் குழந்தை முகம்! 'வணக்கம் சார்." என்றேன். எனக்கென்னவோ மற்ற பத்திரிக்கையாளர் போல அண்ணே! கிண்ணே! கவிஞரே! தலைவரே! என்றெல்லாம் சொல்ல என்னமோ கூச்சமாக இருக்கும்.

"வாங்க தம்பி" கவிஞர் வரவேற்றதும் எனக்கு புல்லரித்தது. தொடர்ந்து அவர் "என்ன விஷயமா வந்தீங்க?" சொன்னேன். "உக்காருங்க'" இருபது வயது நிரம்பாத நான் எங்கே! அவர் ஸ்டேடஸ் எங்கே! அவரது Humility & Respect for others அது எவ்வளவு சிறியவனாயிருந்தாலும்.. எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. இந்த அளவுக்கு சின்னப் பயலான எனக்கும் மரியாதை தந்து ஆச்சரியப்பட வைத்த இன்னொரு உயர்ந்த மனிதர் காலம் சென்ற திரு. வி.கே.ராமசாமி அவர்கள்.

"பரவாயில்லை சார்" என்று நின்று கொண்டேன். "கூச்சப்படாதீங்க தம்பி! நீங்க நின்னுகிட்டு இருந்தா நா அண்ணாந்து பாத்து பேசனும். கழுத்த வலிக்கும்". அவை சொல்லி முடிக்கு முன் அந்த கறுத்த பெண்மணி நாற்காலியை இழுத்துப் போட தயக்கத்துடன் முனையில் உட்கார்ந்தேன்.

கண்ணதாசன்அவர்கள் வளவளவென்று பேசிக்கொண்டிருப்பதில்லை என்பதையும் மற்றவர்களை பேச விட்டு கவனித்துக் கொண்டிருப்பார் என்பதையும் அன்று அறிந்தேன். நேரடியாக விஷயத்தை எடுக்காமல் அவர் மேல் எனக்கு இருந்த வெறி, அவரது பாடல்கள், கவிதைகள் என்று என் தாகம் தணிக்கும் பேச்சுக்களில் ஈடுபட்டேன். அவ்ர் சின்னப் பயலே என்கிற உதாசீனம் இல்லாமல் பொறுமையாக என் பேச்சை இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. " உங்களைப் போல ஒரு உயர்ந்த கவிஞரை நான் பார்த்ததில்லை! உங்களுக்கு பிறகு பார்க்கப் போவதுமில்லை" என்று கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நான் அழுத்தமாகச் சொன்னபோது கூட அவர் முகத்தில் கர்வம் இல்லை. இந்த மாதிரி எத்தனை ஆயிரம் பேர் அவரிடம் சொல்லியிருப்பார்கள். சிரித்தபடி " சமீபத்தில் குழந்தை பாடும் தாலாட்டு' என்று எதிர் மறை இலக்கணம் வைத்து ஒரு இளைஞர் சினிமா பாட்டு எழுதியிருக்கிறார். கேட்டிருக்கீற்களா? அவரே 'வாசமில்லா மலரிது'ன்னும் எழுதியிருக்கிறார். ஒரு வேளை அவர் என் வாரிசாக வருவாரோ என்று நினைக்கிறேன்" என்றார். தலை கனம் இல்லாத, உச்சத்தில் இருந்தும் மற்றவரை புகழ்ந்து சொல்கின்ற அம்மாமனிதரின் சொற்கள் என்னை நெகிழ வைத்து விட்டன. (பின்னொருமுறை T ராஜேந்தரை பேட்டி கண்ட போது இதை சொன்னேன். ரொம்ப உணர்ச்சி வயப்பட்டு என்னை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்பது வேறு கதை)

அதன் பிறகு பேட்டி விஷயமாய் பாரி வள்ளல் சொன்ன சிட்சுவேஷனை விளக்கினேன். அதை சரியாக விளக்கினேனா என்று எனக்கு தெரியவில்லை. திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டு கவியரசர் சிந்தனையில் ஆழ்ந்தார். மீண்டும் Clarification க்காக சில கேள்விகளை கேட்டார். கொஞ்ச நேரம் கழித்து இது சம்பந்தமா சிந்தனையே ஓட மாட்டேங்கிறது. எனக்கு ரெண்டு நாள் டயம் கொடுங்க. மீண்டும் வந்து இதே இடத்தில் பாருங்க! யோசிச்சு வைக்கிறேன்" என்றார்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் ஆர்வத்துடன் கவிதா ஓட்டலுக்கு அவர் சொன்ன மாலை நேரத்தில் போனேன். அதே கீற்றுக் கொட்டகையில் டீபாய் மேல் பாட்டில்சகிதம் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். கொஞம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அந்த கறுப்பு அழகியை காணவில்லை.

மெல்ல நடந்து அவர் அருகில் சென்று வணக்கம் சொன்னேன். " வாங்க தம்பி" வரவேற்றார். ஆனால் இந்த முறை உட்காரச் சொல்லவில்லை. அப்போதே எனக்கு உறைத்திருக்க வேண்டும் அவருக்கு 'மூட்' சரியில்லை என்று. என்னை கொஞம் ஏற இரங்கப் பார்த்தவர் 'ரெண்டு நாளா இத யோசிச்சேன் தம்பி. மண்டை வறண்டதுதான் மிச்சம். எத்தனையோ பேட்டிகள் கொடுத்திருக்கேன். இந்த மாதிரி எதுவும் என்னை பைத்தியம் பிடிக்க வச்சதில்ல. என் சிந்தனையையே ரெண்டு நாளா கெடுத்துடுச்சு. என்ன மாதிரி கேள்வி இது? உங்க ஆசிரியர் கிட்ட சொல்லி கொஞ்சம் அர்த்தமுள்ள பேட்டிகளா எடுக்க சொல்லுங்க!" அவர் குரலில் கோபமில்லை சற்று எரிச்சல் இருந்த மாதிரி தோன்றியது. அவ்ர் கண்கள் கூட கொஞ்சம் சிவந்திருந்ததாஅல்லது நான் கற்பனை செய்து கொண்டேனா தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மிக இளம் வயது, அனுபவமில்லை இந்த சூழலை சமாளிக்கும் பக்குவம் இல்லை. " மன்னிக்கனும் சார். உங்களை பார்த்து பேசியதே என் பாக்கியம். வரேன்" என்று புறப்பட ஆயத்தமானேன். அவர் பதில் சொல்லவில்லை. கன்னத்தில் ஆள் காட்டி விரலையும் முகவாய் கட்டையில் பெருவிரலையும் வைத்தபடி கண்மூடி சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார். எனக்கு உற்சாகம் மொத்தம் வடிந்து போய் என்னவோ போல் ஆகிவிட்டது.

வெளியே வந்து பஸ் பிடித்து வீட்டிற்கு போனபோதும், படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தபோதும் ஒரு மாபெரும் கவியரசரை எரிச்சல் மூட்டி விட்டோமோ என்று என் மீதே அருவெருப்பும் கன்னா பின்னாவென்று முட்டாள்தனமாக ஒரு சிட்சுவேஷனை தந்த பாரி வள்ளலின் மீது கடும்கோபமும் வந்தது.

இரண்டுநாள் சாவி அலுவலகமே போகவில்லை. இந்த சம்பவத்தை பற்றி இன்று வரை யாரிடமும் சொன்னதில்லை. எப்படி சொல்லுவேன். பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய நிகழ்ச்சியா இது? பின்பு சாவி அலுவலகம் போனபோது பாரிவள்ளல் இல்லை. நிம்மதி பெருமூச்சு விட்டேன். அந்த நிம்மதி கொஞ்ச நேரத்துக்குத்தான். திடு திடுப்பென எங்கிருந்தோ உள்ளே நுழைந்தவர் என்னை கவனித்து விட்டார். "என்ன ஆச்சு! பேட்டி கிடச்சுதா?" உதடு வரை வந்த" உதக்காம உட்டாரே" வை மனசுக்குள் அடக்கி "அவர் ரொம்ப பிசி! அர்த்தமுள்ள மதம் அடுத்த பாகம் எழுதிகிட்டிருக்கார். இதப் பத்தி யோசிக்க நேரமில்லயாம்" என்று டகிள் அடித்துவிட்டு அவரிடம் இருந்து கழன்று கொண்டேன்.

இன்று வரை நானும் அந்த சிட்சுவேஷன் என்ன? கேள்வி என்ன? பாரி வள்ளல்தான் க்ராக்தனமாக ஏதாவது கொடுத்தாரா? நான்தான் தவறாகப் புரிந்து கொண்டு சொதப்பி விட்டேனா என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன். எனக்கே பல சமயம் மண்டை குழம்பி விடும். கண்ணதாசன் அப்போதே என்னை மன்னித்து விட்டிருப்பார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

23 comments:

இலவசக்கொத்தனார் said...

வாங்க அண்ணா. தொடர்ந்து எழுதுங்க.
கடைசி வரை சிச்சுவேஷன் என்னான்னு சொல்லாமலேயே குடிச்சுட்டீங்க. சாரி முடிச்சுட்டீங்க! :)

இந்த வேர்ட் வெரிபிகேஷன் நான்சென்சை எடுத்து விட்டுடுங்க!

ILA (a) இளா said...

அட சூழ்நிலை என்னான்னு சொல்லுங்க,. நாங்களும் கோப்பையும் கன்னத்துல கையுமா (பக்கத்துல அழகி இல்லாமத்தான்) மண்டை காயுவோம்ல?

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

கீப் இட் அப்! "நிறைய எழுதுங்கள்!" என்று எனக்கு என் குருஜி சுஜாதா அடிக்கடி சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன்!

Vijay said...

சிச்சுவேஷன் என்னான்னு சொல்லியிருந்தா இன்னுமே நல்லா இருந்திருக்கும்.

ஆயில்யன் said...

டிவிட்டர்ல எழுத வேண்டிய விசயமா இது :)

கடைசி வரைக்கும் சிச்சுவேஷன் சொல்றேன் சொல்றேன்னு இங்கயும் டகிள் அடிச்சு எஸ்ஸாகிட்டீங்க எப்படி இருந்தாலும் கண்ணதாசனை சந்தித்த நிகழ்வு -அதுவும் தீவிர பக்தன்- அருமையான சான்ஸேதான்!

தொடருங்கள் !

Anonymous said...

செமத்தியான ஸ்டார்ட் சீனியர் :) அப்படியே பிக்-அப் பண்ணிப் போய்கிட்டே இருங்க :)))

நான் பிக்-அப்-ன்னு சொன்னது ப்ளாகைதான், வம்புவாதிகள் வேற ஏதாவது அர்த்தம் கண்டுபிடிப்பாங்க நம்பாதீங்க ;)

- என். சொக்கன்,
பெங்களூர்.

enRenRum-anbudan.BALA said...

டகிள்பாட்சா,

வலைப்பதிவு தொடங்கியதற்கு வாழ்த்துகள்!

டிவிட்டரில் உங்க DM பார்த்தேன். பத்திரிகை உலகில் ஏற்கனவே தடம் பதித்துள்ள உங்களை Encourage பண்ணி மீண்டும் எழுத வைக்க என்னாலான சிறுமுயற்சி வெற்றி பெற்றுள்ளது :)

தொடர்ந்து எழுதவும். உங்கள் பத்திரிகை அனுபவம், அரசியல் பார்வை, அமெரிக்க வாழ்க்கை, புதுக்கவிதை .. என்று எதை வேண்டுமானாலும் எழுதவும். நீங்கள் சுவாரசியமாக எழுதக்கூடியவர் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை !

ஆனால், ஒரு வேண்டுகோள், தான் எழுதுவதற்கு என்னை இன்ஸ்பிரேஷனாக சொல்லிக் கொள்ளும் டோ ண்டு ராகவனால் பல கான்டவர்ஸிஸ், அதனால் எனக்கு ஏகப்பட்ட தொல்லை ;-) உங்களால் எனக்கு எந்த இக்கட்டும் வராது என்று நம்புகிறேன் :)

அன்புடன்
பாலா
(சக GCTian)

சத்யராஜ்குமார் said...

உங்களோடே தங்கி விடக் கூடிய அனுபவங்கள் மற்றவர்களுக்கும் படிக்க கிடைக்கும் சாத்தியம் தருவதால் இணையம் எல்லோருக்குமே ஒரு வரம். ஆதனால் நீங்கள் தொடர்ந்து எழுதி வர வேண்டும்.

Priya Raju said...

அது என்ன அப்படிப்பட்ட சிச்சுவேஷன்? ஆனாலும், கவிஞர் ஒரு இளைஞரை நோகடித்திருக்க வேண்டாம்.

Anonymous said...

வலைப்பூ தொடங்கியதற்க்கு வாழ்த்துக்கள்

சொக்கனார் கூறியது போல செமத்தியான ஸ்டார்ட் :)

ஆனால் கடைசி வரை என்ன கேள்வி கேட்டிங்கன்னு சொல்லாம டகிள் விட்டுடீங்களே ...

தொடரிந்து எழுதுங்கள்

சுவாசிகா
http://swachika.wordpress.com

புருனோ Bruno said...

//சிரித்தபடி " சமீபத்தில் குழந்தை பாடும் தாலாட்டு' என்று எதிர் மறை இலக்கணம் வைத்து ஒரு இளைஞர் சினிமா பாட்டு எழுதியிருக்கிறார். கேட்டிருக்கீற்களா? அவரே 'வாசமில்லா மலரிது'ன்னும் எழுதியிருக்கிறார். ஒரு வேளை அவர் என் வாரிசாக வருவாரோ என்று நினைக்கிறேன்" என்றார். தலை கனம் இல்லாத, உச்சத்தில் இருந்தும் மற்றவரை புகழ்ந்து சொல்கின்ற அம்மாமனிதரின் சொற்கள் என்னை நெகிழ வைத்து விட்டன.//

நெகிழ வைக்கும் விஷயம் :) :)

நிஜமான பெரிய மனிதர் அவர் :) :)

Priya Raju said...

கவிஞரே புகழும் திறமையிருந்தும், ராஜேந்தர் "அடங்கொப்பன் மவனே, கொப்பன் மவனே, டண்டணாக்கார" என்று கவுஜ எழுதி வீணாய்ப் போனாரே.

Priya Raju said...

கவிஞரே புகழும் திறமையிருந்தும், ராஜேந்தர் "அடங்கொப்பன் மவனே, கொப்பன் மவனே, டண்டணாக்கார" என்று கவுஜ எழுதி வீணாய்ப் போனாரே.

(Mis)Chief Editor said...

உங்களுக்கு முன்னால் நான் 'பச்சா'!!

தங்களுக்கு கண்ணதாசன் எப்படியோ,
அப்படி நீங்கள் எனக்கு!!
படித்தபின் தோன்றியது இதுதான்!

வளர்க உமது பணி!

டகிள் பாட்சா said...

இலவச கொத்தனார் & ILA: விஜய்: நன்றிங்கண்ணா. உண்மயிலேயே யோசிச்சு யோசிச்சு எனக்கும் மண்ட காஞ்சு போச்சுங்க

LA ராம்: குருஜி! நன்றி. உங்கள் வருகையால் என் ப்ளாக் புனிதமடைந்தது

ஆயில்யன்: உண்மையில் நான் நினைத்து நினைத்து மகிழும் நிகழ்வு. கண்ணதாசனை இன்னும் நேசிக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களில் அடியேனும் ஒருவன்

சொக்கன்: உன்கள் வாழ்த்துக்கு நன்றி.

பாலா: ஹலோ சீனியர். என் மேல நம்பிக்க வச்சு உற்சாகம் கொடுத்ததற்கு நன்றி. என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்காதீங்க. நான் திடீல் திடீல்னு காணாம போயிடுவேன்

சத்தியராஜ்: வாங்க காலேஜ்மேட்! encourage செய்ததற்கு மிக்க நன்றி.

ப்ரியா ராஜு: இந்த நூற்றாண்டி தலை சிறந்த கவி. அவரை பார்த்து பேசியதே பெரிய பாக்கியம். அடக்கமும், மற்றவரை மதிக்கும் குணமும் கொண்டவர்தான் அவர். இருந்தாலும் ஒரு முட்டாள்தனமான பேட்டி 2 நாள் குழப்பினால் யாருக்குதான் mood out ஆகி எரிச்சல் வராது? அவர் நினைத்திருந்தால் என்னை மிக கடுமையாக பேசியிருந்திருக்கலாம். He wanted to convey his irritation. அவருக்கே தெரியும் இந்த மாணவப் பருவத்து நிருபர்களை பின்னால் இருந்து ஆட்டுவிப்பது பத்திரிக்கை ஆசிரியர்தான் என்று.

உண்மைதான். இளமையில் TRக்கு சிறந்த பாடல் எழுதும் திறமை இருந்தது.ஆனால் சினிமாவில் அஷ்டாவதானியாக வேண்டும் என்ற கனவில் அல்லது பணம் புகழ் அடைய பாடல் மட்டும் போதாது என்கிற எண்ணத்திலும் அதை கோட்டை விட்டு விட்டு, மற்ற உதவியாளர்கள் தோள் மீது சவாரி செய்து, அதற்கான credits எல்லாவற்றையும் தானே எடுத்துக்கொண்டு, சுற்றி ஒரு பெரிய ஜால்ரா கூட்டம் கூட்டி, பல பேரை மொட்டையடித்து, அப்பப்பா! May be கவிஞராக இருந்திருந்தால் இத்தனை பணம் சேர்த்திருக்க முடியாது

swachika: பல வருடங்களுக்கு பிறகு எழுதுவதால் எனக்கே தெரியும் This is not upto the mark என்று. இருந்தாலும் உற்சாகப்படுத்தனும் என்று ' Good Start' சொன்னதற்கு ரொம்ப நன்றி

Bruno: டாக்டர்! வாங்க! மிக்க நன்றி

(Mis)Chief Editor: யாருங்க இது! சொக்கனா! கொஞ்சம் உங்கள அடையாளம் காட்டுங்க. நன்றி! ஆனா நீங்க ஒரேயடியா என்ன புகழ்ந்திருப்பத பாத்தா நான் செய்த செட் அப் புன்னு நெனப்பாங்க!

Raju said...

உங்கள் உண்மை பெயரை கூறிடுங்க ஸூபர் சீனியர்!

எங்கெல்லாம் எழுதியிருக்கீங்க? லிங்க்கு கொடுங்க.

வார்த்தை ஓட்டம் உங்க நண்பர் பாலா போல அச்சு பிசகாமல் உள்ளது! :-)

டகிள் பாட்சா said...

ராஜு: வாங்க ஜூனியர் சார். முன்ன LA_Ram மற்றும் இதர ப்ளாக்ல கமெண்ட்ஸ் பல போட்டேன். இப்பதான் கொஞம் டயம் கெடச்சு என் ப்ளாக் ஐ ஆரம்பிச்சேன். பாலா என் சமீப கால நண்பர். அவர் என் GCT கால் கவிதைகளை போடறேன்னார். எனக்கு senior கேட்டா இல்லைன்னு சொல்ல முடியுமா? அவரோட ப்ளாகில இன்னிக்குதான் போட்டார். போய் பாருங்க! உங்க கருத்துக்களை பதிவு பண்ணுங்க.

இரா. வசந்த குமார். said...

அன்பு டகிள் பாச்சா சார்...

வாழ்த்துக்கள். என்ன ஓர் ஒற்றுமை..? கிட்டத்தட்ட உங்கள் பெயரிலேயே ஒரு கதை எழுதியிருக்கிறேன். எங்கேயோ உங்கள் பெயரை முன்பே கேள்விப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். :)

http://kaalapayani.blogspot.com/2008/07/blog-post_24.html

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

டகிள் பாட்சா said...

வாங்க வஸந்த்! உங்கள் வருகைக்கு நன்றி! கடல் கன்னின்னா ரொம்ப பிடிக்குமோ உமக்கு! நல்லாத்தேன் இருக்கு உங்க கற்பனை! உங்கள் நாயகன் டகால் பாச்சா! நான் டகிள் பாட்சா!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பல சுவையான தகவல்கள் இது போல வெளிவரலாம் என்று நம்புகிறோம்...

அடித்து ஆடுங்கள்..

நல்வரவு.

(Mis)Chief Editor said...

ஐயா! நான் ஒரு சாமானியன்!
எழுத்துக்களை ரசிப்பவன், அவ்வளவே!

நீங்கள் நினைக்கும் 'சொக்கன்' நானில்லை!

seethag said...

"கறுத்த நிறத்தில் ஆனால் களையாய் "இத தவிர்திருக்க்அலாமே.நம்மை அறியாமல் நமகுள்ளே உள்ள இந்த எண்ணம் தான் fair and lovely க்கு காசு கிடைக்கிறது?மற்ற படி உங்கள் பதிவு சுவாரசியம் , அதுமத்துமல்ல சில பெரிய எழுத்தளர்கள் போல situation சொல்லமலே பதிவை முடித்துவிட்டீர்கல்.அது உங்கள் பல வருட அனுபத்தை காட்கிறது. agatha christyஇன் sad cyprus கதையில் இப்படிதான் , எல்லரும் சண்டை போட்டுகொள்ளும் ஒரு வரைபடமோ என்னமோ ,என்ன இருக்கிறது என்று கடைசிவரை தெரியாது.

+Ve Anthony Muthu said...

மிக அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் ஐயா.